இடுகைகள்

விளையாட்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதுவும் 2-வது இன்னிங்சில் வெறும் 36 ரன்னில் சுருண்டு இந்தியா மிக மோசமான சாதனையை பெற்றது. இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய போட்டியாளர்களின் விவரங்களை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இந்திய அணி போட்டியாளர்களின் விவரம்:- ரகானே, மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, விஹாரி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விராட் கோலி பேறுகால விடுப்பில் சென்றுள்ள ந...

நாளை தொடங்குகிறது இந்தியா ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி

மெல்போர்னில் நாளை தொடங்குகிறது இந்தியா ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி ஆஸ்தீலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக் கெட் அணி 4 போட்டி கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இ தில் அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத் தில் படுதோல்வி அடைந்தது. அதுவும் 2-வது இன்னிங்சில் வெறும் 36 ரன்னில் சுருண்டு இந்தியா மோசமான சாதனையை பெற்றது. இந்தியா- ஆஸ்தீலியா அணி கள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக் கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்க ளில் ஒன்றான மெல்போர்னில் நாளை (சனிக்கிழமை) தொடங்கு கிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்1 சேனல் கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. கிறிஸ் துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே’ என்ற பெயரில் அழைக்கப்படு கிறது. ‘பாக்சிங் டே’ என்றால் ஒருவருக்கொருவர் கோதாவில் குதிக்கும் நாள் என்று அர்த்தம் கிடையாது. இதற்கென நீண்ட பாரம்பரியம் உண்டு. அந்த பெயர் எப்படி வந்தது என்பதை இங்கு பார்க்கலாம். இங்கிலாந்து, ஆஸ்தீலியா, நியூசிலாந்து, க...

தனது சாதனையை தோட்ட மெஸ்ஸிக்கு பீலே வாழ்த்து

தனது சாதனையான 643 கோல்களை சமன் செய்த மெஸ்ஸிக்கு பீலே தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் ஆவர் பீலே (வயது 80). கடந்த 1956-ம் ஆண்டு தனது 15-வது வயதில் கால்பந்து விளை-யாட்டில் இறங்கி தொடர்ந்து 1974-ம் ஆண்டு வரை விளையாடிய பெருமை பெற்றவர். இதில், 6 பிரேசிலியன் லீக் பட்டங்க-ளையும், 2 கோப்பா லிபர்டடோர்ஸ் பட்டங்க-ளையும் வென்றுள்ளார். உலககோப்பை-யை 3 முறை வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்கு உரியவர். இதுவரை தனது அணிக்காக பீலே 643 கோல்-களை அடித்து உள்ளார். இதேபோன்று அர்ஜெண்டினா நாட்டின் கால்பந்து வீரரான மெஸ்சி வேலென்சியா அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா அணிக்காக விளையாடி இந்த கோல்-களை அடித்து பீலேவின் சாதனை-யை சமன் செய்துள்ளார். அவருக்கு பீலே தனது வாழ்த்து-களை தெரிவித்து கொண்டார். உனது இருதயம் அன்பு நிறைந்து வழிந்தோடும்பொழுது, உன்னுடைய பாதை-யை மாற்றுவது கடினம். வரலாற்று சாதனைக்கு என்னுடைய வாழ்த்துகள். இவை அனைத்திற்கும் மேலாக பார்சிலோனா அணியில் தொடரும் உனது விளையாட்டுக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்து உள்ளார். கடந்த 2004ம் ஆண்டு தனது 17வ...

டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை நெருங்கும் கோலி

டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஸ்டெவன் ஸ்மித்தை இந்திய கேப்டன் விராட் கோலி நெருங்கியுள்ளார். போட்டியில் செயல்பாட்டின் அடிப்ப-டையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. மட்டை வீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் முதல் இடத்தில தொடருகிறார். அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்சிலும் தலா ஒரு ரன் மட்டுமே எடுத்த அவர் 10 தரவரிசை புள்ளிகளை இழந்து தற்போது 901 புள்ளிகள்பெற்றுள்ளார். அதேசமயம் இதே டெஸ்டில் அரைசதம் அடித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2 புள்ளி கூடுதலாக பெற்று மொத்தம் 888 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடி-க்கிறார். ஸ்டீவன் சுமித்தை வெகுவாக நெருங்கி விட்ட கோலி இன்னும் 13 புள்ளிகள் மட்டுமே பின் தங்கியுள்ளார். ஆனால் ஆஸ்திரேலியா-வுக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் கோலி விளையாட-ததால் போட்டியை தவறவிடுவதற்குரிய புள்ளிகளை இனி இழப்பார். தொடக்க டெஸ்டில் சரியாக சோபிக்காத புஜாரா 11 புள்ளிகளை இழந்ததுடன் தரவரிசையில் ஒரு இடம் குறைந்து 8-வது இடத்துக்கு (755 புள்ளி) தள்ளப்பட்டார். ...

தோகாவில் நடைபெறுகிறது 2030 ஆசிய விளையாட்டு போட்டி

4 வருடத்திற்கு ஒரு முறை ஆசிய விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக இந்த போட்டி 2018-ஆம் ஆண்டில் இந்தோனேஷியாவில் நடைபெற்றது. 2022-ஆம் வருடத்திற்கான போட்டியை சீனாவும், 2026-ஆம் வருடத்திற்கான போட்டியை ஜப்பானும் நடத்தும் உரிமையை பெற்று இருக்கின்றன. 2030-ஆம் வருடத்திற்கான 21-வது ஆசிய விளையாட்டு போட்டியை நடத்தும் நாடு எது? என்பதை நிர்ணயிப்பதற்கான ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை தங்கள் நாட்டின் தலைநகர் தோகாவில் நடத்த கத்தாரும், தங்கள் நாட்டின் தலைநகர் ரியாத்தில் நடத்த சவூதி அரேபியாவும் விண்ணப்பித்து இருந்தன. போட்டியை நடத்தும் உரிமத்தை பெற இரு நாடுகள் இடையே கடும் போட்டி நிலவியதால் யாருக்கு உரிமம் வழங்குவது என்பதை முடிவு செய்ய ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் 45 உறுப்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஆன்லைன் மற்றும் வாக்குச்சீட்டு மூலம் தங்களது வாக்கை பதிவு செய்தனர். மின்னணு எந்திரத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஆன்லைன் வாக்கெடுப்பில் தாமதம் ஏற்பட்டது. முடிவில் அதிக வாக்குகள் பெற்ற கத்தாருக்கு 20...

நடராஜனை தெரிந்த உங்களுக்கு பெரியசாமியை தெரியுமா ? இவர்தான் தமிழ்நாட்டு மலிங்கா வைரல் வீடியோ

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சேலத்துக்கு விளையாடுபவர்தான் இந்த பெரியசாமி இவர் பந்து வீசும் முறை அப்படியே மலிங்கா வீசுவது போலவே இருக்கும் . இவரை தமிழ்நாட்டு மலிங்கா என்றே அழைக்கின்றனர் . இவர் வீடியோ ஓன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது . இந்த விடியோவை பார்த்தால் உங்களுக்கே தெரிந்துவிடும் இவரது திறமை . சேலம் நடராஜன் தெரிந்த உங்களுக்கு இவரை தெரிய வாய்ப்பில்லைதான் . நாம்தான் நம் இனத்தவரை ஊக்குவிக்க வேண்டும் . அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் தமிழனின் பெருமையை விடியோவை பாருங்க பிடித்திருந்தால் பாராட்ட நினைத்தால் பகிருங்கள் எல்லோருக்கும் https://www.youtube.com/watch?v=8ZpbPo_W054

கொடுத்ததை திருப்பி கொடுக்கும் கோலி : வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முரட்டுத்தனமான கிரிக்கெட் வீரர் என்பது அனைவரும் அறிந்த விசயமே . தன்னை சீண்டுபவர்களை கேப்டன் கோலி என்றுமே சும்மா விட்டது இல்லை . எப்போதும் எதிர் அணியினருக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர் தான் கேப்டன் விராட் கோலி . அவர் எதிர் அணியினர் செய்த சீண்டலுக்கு திருப்பி பதிலடி கொடுக்கும் வீடியோ ஓன்று இப்போது வைரல் ஆகி வருகிறது . உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது . பார்த்துவிட்டு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் . https://www.youtube.com/watch?v=5K88V_ySflw

டீம் மேட்டை அடிக்கப் பாய்ந்த பங்களாதேஷ் வீரர் ( Video )

பங்களாதேஷ் பங்கபந்து (Bangabandhu) டி20 கிரிக்கெட் தொடர் போட்டியில் முன்னணி வீரரான முஷ்பிகுர் ரஹீம், சக வீரர் ஒருவரை தாக்க கையை ஓங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்க பந்து டி20 தொடரில் இப்போது 20 போட்டிகள் முடிவடைந்துள்ளன. elimineter சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய போட்டியில் தாக்கா (Beximco Dhaka) -  பரிஷல் (Fortune Barishal) அணிகள் மோதின.  தாக்கா அணிக்கு கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக இருப்பவர் முஷ்பிகுர் ரஹீம். இவர் விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த போது 17-வது ஓவரில் பரிஷல் அணி, 19 பந்துகளில் 45 ரன்கள் எடுக்க வேண்டிய சூழல் இருந்தது. பரிஷல் அணியின் அபீஃப் ஹோசைன் சிறப்பாக விளையாடிக் கொண்டிரு-ந்தார். அதனால் கேப்டனான முஷ்பிகுர் ரஹீம் டென்ஷனாக இருந்தார். அப்போது 17-வது ஓவரின் கடைசிப் பந்தை அபீஃப் ஹோசைன் தூக்கிஅடிக்க, அந்த பந்து எழுந்து மே லே சென்றது. அது தன்னுடைய கேட்ச் என சொல்லிக்கொண்டே ரஹீம் ஓடி வர, அந்த பந்தை பிடிக்க பீல்டரான நசுமும் ஓடி வர இருவரும் மோதிக் கொள்வது போல சென்றனர். ஆனால் இறுதி-யாக அந்த கேட்சை கேப்டன் ரஹீம் பிடித்தார். பந்தை கே...

ரசிகர்களின் மனதை வென்ற முகமது சிராஜ் : நடந்ததை பார்த்தால் நீங்களும் வாழ்த்துவீங்க

படம்
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் நடந்துகொண்ட விதத்தில் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார் . ஆத்திரேலியாவில் நடந்துவரும் பயிற்சி ஆட்டத்தில் பும்ரா அடித்த பந்து பந்து வீச்சாளரின் தலையில் பட அடுத்த வினாடியே எதிர் திசையில் நின்றிருந்த சிராஜ் ரன் எடுக்க ஓடாமல் பந்து வீச்சாளரை நோக்கி ஓடி பந்து வீச்சாளரை பார்வையிட்டார் . ரன் எடுப்பதை விட காயம் பட்டவரை கவனிப்பதே முக்கியம் என்று பார்த்ததால் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர் உங்களுக்க அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்து பாராட்டுங்கள் இது போன்ற பதிவுகளுக்கு இணைந்திருங்கள்

தங்கராசு நடராஜன் ''யார்க்கர் நடராஜன்'' ஆனது எப்படி ?

தனது முதல் தொடரிலேயே இந்தியாவின் வெற்றிக்கு நாயகனாக திகழ்ந்து, கிரிக்கெட் உலகை வியக்க-வைத்துள்ளார் "யார்க்கர் மன்னன் நடராஜன்" சேலம் மாவட்டத்தில் சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 29 வயதான நடராஜன் தங்கராசு. சின்னப்பம்பட்டி வீதிகளில் டென்னிஸ் பந்துகளில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த நடராஜன், 15 ஆண்டு விடா முயற்சியால் ஆஸ்திரேலியா-விற்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு தேர்வாகி சாதனை பயணத்தை தொடங்கி-யுள்ளார். IPL கிரிக்கெட் தொடரில் யார்க்கர் நாயகனாக ஜொலித்த நடராஜன், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கான நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டார். மற்றொரு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு காயம் ஏற்படவே, நடராஜனுக்கு இந்த வாய்ப்பு கைகூடியது. தங்கராசு நடராஜன் ''யார்க்கர் நடராஜன்'' ஆனது எப்படி ? என்பதை வீடியோ பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் https://youtu.be/GZlFSRrubHI

நடராஜனால் மிகப்பெரிய அளவில் மேம்பட முடியும் : கேப்டன் கோலி பாராட்டு

ஆஸ்திரேலியா-வுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியின் வெற்றிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி பேசியதாவது: ''ரவீந்தர் ஜடேஜாவுக்கு தலையில் அடிபட்டதால் சாஹல் களம் இறங்கி சிறப்பாக பந்து வீசினார். ஆடுகள நிலவரம் அவருக்கு ஏற்றபடி சாதகமாக இருந்தது.  ஆஸ்திரேலிய அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது அதை பார்க்கும் தோற்கடித்து விடுவார்கள் என்று நினைத்தோம். டி20 என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் . நாங்கள் போதுமான அளவிற்கு நெருக்கடி கொடுத்தோம். டி20 யில் கொஞ்சம் அதிஷ்டமும் தேவை . நடராஜனை பார்த்தால், அவரால் மிகப்பெரிய அளவில் மேம்பட முடியும் போல் தோன்றுகிறார். ஹர்திக் பாண்ட்யா கேட்ச் திருப்புமுனையாக அமைந்தது” என தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து ஜடேஜா விலகல் - இந்திய அணிக்கு பின்னடைவு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று கான்பெர்ராவில் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி அட்டகாசமான வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது . நேற்றைய போட்டியில் பேட்டிங் செய்யும்போது இந்திய அணியின் வீரர் ஜடேஜா காயம் அடைந்தார். முதலில் ஹாம்ஸ்டிரிங் காயம் அடைந்தார். அதன்பின் மிட்செல் ஸ்டார்க் வீசிய பவுன்சர் பந்து அவரின் ஹெல்மெட்டை தாக்கி கன்கசன் ஆனார். இந்நிலையில் காயம் காரணமாக ஆஸ்திரேலியா-வுக்கு எதிரான டி-20 தொடர் தொடரில் இருந்து இந்திய அணி வீரர் ஜடேஜா முழுவதுமாக விலகியுள்ளார்.மீதமுள்ள இரண்டு டி20 போட்டியில் ஜடேஜா விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் இணைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் டி20 யில் வெறிக்கு பக்கபலமாக அடித்தளமிட்டது ரவீந்தர் ஜடேஜா என்பது குறிப்பிடத்தக்கது.

நடால் விலகுகிறாரா அமெரிக்க ஓபன் டென்னிசிலிருந்து ?

படம்
நடால் விலகுகிறாரா அமெரிக்க ஓபன் டென்னிசிலிருந்து ? மாட்ரிட், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் ஆகஸ்டு 31-ந்தேதி முதல் செப்டம்பர் 13-ந்தேதி வரை நடத்தப்படுகிறது. ஆனால் நியூயார்க்கில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் நிறைய வீரர்கள் அங்கு செல்ல தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் உலகின் 2-ம் நிலை வீரரும், அமெரிக்க ஓபனின் நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் ரபெல் நடால், செப்டம்பர் 13-ந்தேதி தொடங்கும் மாட்ரிட் ஓபனில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளதன் மூலம் அவர் அமெரிக்க ஓபனில் ஆடமாட்டார் என்பது ஏறக்குறைய தெளிவாகி விட்டது. செப்டம்பர் 27-ந்தேதி தொடங்கும் களிமண் தரை போட்டியான பிரெஞ்ச் ஓபனுக்கு தயாராகும் வகையில் அவர் மாட்ரிட் ஓபனில் களம் இறங்க முடிவு செய்து இருக்கிறார்.

‘ஐ.பி.எல். இல்லாமல் இந்த ஆண்டை முடிக்க விரும்பவில்லை’ - கங்குலி

படம்
‘ஐ.பி.எல். இல்லாமல் இந்த ஆண்டை முடிக்க விரும்பவில்லை’ - கங்குலி புதுடெல்லி, - இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி நேற்று 48-வது வயது பிறந்த தினத்தை கொண்டாடினார். இதையொட்டி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், கேப்டன் விராட்கோலி, தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், முன்னாள் வீரர்கள் ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண், யுவராஜ் சிங், முகமது கைப் மற்றும் சுரேஷ்ரெய்னா, ஹர்பஜன்சிங் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளம் மூலம் கங்குலிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து மழை பொழிவித்தனர். ‘களத்துக்கு உள்ளே அமைந்தது போன்று நமது கூட்டணி களத்துக்கு வெளியேயும் வலுவாக தொடரும் என்று நம்புகிறேன். இது சிறப்பான வருடமாக உங்களுக்கு அமைய வாழ்த்துகள்’ என்று சச்சின் தெண்டுல்கர் கூறினார். பிறந்த நாளை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில் பேசியதாவது:- ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்றி இந்த ஆண்டை (2020) நிறைவு செய்ய நாங்கள் விரும்பவில்லை. ஐ.பி...

யுவராஜின் 6 சிக்ஸ் சாதனையை நிகழ்த்திய நியூசி வீரர்

நியூ சிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக் கெட் போட்டி யில் வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 6 சிக்சர் கள் விளாசி அனை வரையும் வியக்க வைத்தார்.  நியூ சிலாந்தில் சூப்பர் ஸ்மாஷ் என்ற T20 தொடர்  நடைபெற்று வருகிறது. இதில் கேண்டர் புரி மற்றும் நார்தெர்ன் நைட்ஸ் ஆகிய அணிகள் நேற்று பலப் பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த நார் தெர்ன் நைட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து கேண்டர்புரி அணிக்காக கள மிறங்கிய லியோ கார்டர், நார்த்தென் நைட்ஸ் அணி வீரர் ஆண்டன் டெவிசிக் வீசிய 16ஆவது ஓவரை எதிர் கொண்டார். அந்த ஓவரில் அனைத்து பந்துகளையும் சிக்சராக விளாசி ரசிகர்களை வியப்பில் ஆழ்த் தினார் லியோ கார்டர். 36 off an over! 😲 Leo Carter hit 6 sixes in a row and the @CanterburyCrick Kings have pulled off the huge chase of 220 with 7 balls to spare at Hagley Oval! 👏 Scorecard | https://t.co/uxeeDsd3QY #SuperSmashNZ #cricketnation 🎥 SKY Sport. pic.twitter.com/nuDXdp1muG — Dream11 Super Smash (@SuperSmashNZ) January 5, 2020 இதனால் கேண்டர் புரி அணி 18.5 ஓவர்களில் எளிதில் வெற்றிஇலக்கை அடைந்தத...

விராட் கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

படம்
கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், நடிகை பிரியங்கா சோப்ராவும் இன்ஸ்டாகிராமில் பதிவுகளை இட்டு பல கோடிகளை வருவாயாக ஈட்டி வருகின்றனர் என்கிறது ஒரு தனியார் நிறுவனம்.  இன்ஸ்டாகிராமில் மதிப்புமிக்க நட்சத்திரங்களின் பட்டியலை தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இரண்டு இந்தியர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஒருவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இந்த பட்டியலில் 23 இடம் பிடித்துள்ள கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் மதிப்பு, சுமார் ஒரு கோடியே 36 லட்சம் என்கிறது அந்த பட்டியல். பல பிரபலமான விளையாட்டு சாதனங்களை உருவாக்கும் நிறுவனங்களுடன் கைக் கோர்த்துக் கொண்டு பல போஸ்ட்டுகளை விராட் இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.   இந்த பட்டியலில் இருக்கும் இன்னொரு இந்தியர், நடிகை பிரியங்கா சோப்ரா. இந்த பட்டியலில் விராட் கோலியை முந்திய பிரியங்கா, 19வது இடத்தில் உள்ளார். பிரியங்கா சோப்ரா பதிவிடும் ஒவ்வொரு இன்ஸ்டா போஸ்ட்டுக்கும் அவர் வாங்கும் தொகை சுமார் ஒரு கோடியே 86 லட்சம் என கூறப்படுகிறது. பல அழகு சாதன பொருட்களை விற்கும் நிறுவனங்களுடன் கைகோர்த்து, இன்ஸ்டா போஸ்ட்டுகளை பதிவிட்டு வருகிறார் பிரியங்கா சோப்ர...

ஓய்வு குறித்து அறிவித்து முற்றுப்புள்ளி வைத்த தோனி!

படம்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்தது முதலாகவே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பேசுபொருளாக மாறியிருப்பவர் மகேந்திர சிங் தோனி. 38 வயதாகிவிட்ட நிலையில் தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என்ற தகவல்கள் தான் சமீபத்திய நாட்களில் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. இதுவரை தோனியோ அல்லது இந்திய கிரிக்கெட் வாரியமோ இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடாத நிலையில் தற்போது தோனியின் ஓய்வு பற்றிய பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான விஷயம் அரங்கேறியுள்ளது. பாரா ரெகிமெட்ண்ட் படையில் இணைய இருப்பதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தான் தற்காலிகமாக அணியில் இடம்பெறமுடியாது என இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தோனி தகவல் அனுப்பியுள்ளார். இதன் மூலம் ஆகஸ்ட் 8ம் தேதி தொடங்கவிருக்கும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனி கலந்துகொள்ள இயலாது என்பது உறுதியாகியுள்ளது. மேற்குஇந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய அணி, 3 டி-20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதற்கான இந்திய அணியை பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு நாளை அறிவிக்க உள்ளது. விமானப்படையின் ப...

2 பேர் ஆட்டம் தான் அட்டகாசம்.. யாரை சொல்றாரு சச்சின்?

படம்
WORLD CUP 2019 | உலகக்கோப்பையில் யார் நல்லா விளையாடினாங்க?.. சச்சின் பதில் - வீடியோ மும்பை : உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் சிறப்பாக ஆடிய இரண்டு வீரர்கள் இவர்கள் தான் என இருவரை சுட்டிக் காட்டி இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக ஆடினாலும் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த நிலையில், இந்திய அணியில் சிறப்பாக ஆடிய வீரர்கள் யார் என்பது குறித்து தன் 100MB செயலியில் கருத்து கூறி இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர் அரையிறுதி தோல்வி இந்திய அணி உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி தவிர தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தது. அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. யாரை சொல்கிறார் சச்சின்? இந்திய அணியில் சிறப்பாக ஆடிய வீரர்கள் குறித்து பேசிய சச்சின், "உண்மையில், எல்லோரும் அவர்கள் வேலையை சரியாக செய்தார்கள். ஆனால், என்னை தேர்வு செய்யச் சொன்னால் ரோஹித் சர்மா மற்றும் பும்ராவை தேர்வு செய்வேன். அவர்கள் இருவரும் அட்டகாசமாக ஆடின...

மானநஷ்ட வழக்கு; வெற்றி பெற்றுள்ள கெயில்

படம்
நியூ சவுத் வேல்ஸ்: பிரபல வீரர் கெயில் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு தீர்ப்பை எதிர்த்து ஆஸ்திரேலிய ஊடகம் தாக்கல் செய்த அப்பீல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அப்போது வீரர்கள் ஓய்வறையில் பெண் பத்திரிகையாளரிடம், மேற்கிந்திய தீவுகள் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் தகாத முறையில் சைகை செய்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தச் செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. ஓய்வறையில் இருந்தபோது செய்தியாளர்கள் யாரும் எனது அறைக்கு வரவில்லை. என்னுடன் என்னுடைய சக அணி வீரர் டுவெய்ன் ஸ்மித் உடன் இருந்தார் என்று கெயில் மறுத்தார். மேலும், இந்தச் செய்திகள் தனது நற்பெயருக்கும், மரியாதைக்கும் களங்கம் விளைவிக்கும் செயல் எனக் கூறி ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். முடிவில் கெய்லுக்கு ரூ. 1.44 கோடி நஷ்ட ஈடை தர வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. ஆனால், மற்றொரு பக்கம், நஷ்ட ஈட்டு தொகை போதாது என்றும், எனவே அதை உயர்த்தி தர வேண்டும் என்றும் கெயில் அப்பீல் ச...

பின்னுக்கு சென்ற இந்திய அணி.. உலகக் கோப்பை தோல்வியால் நேர்ந்த அதிர்ச்சி..

லண்டன்: உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்தது இந்திய அணிக்கு ஐசிசி புள்ளிகள் பட்டியலில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்தியா இதிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி தோல்வியுடன் வெளியேறியது.. லீக் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்ற இந்திய அணி செமி பைனல் போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த தொடரில் அசத்தலாக வெற்றிபெற்று இங்கிலாந்து அணி கோப்பையை வென்றுள்ளது. ஒரு ரன் கூட வித்தியாசம் இல்லாமல் நியூசிலாந்து அணி தோல்வியை சந்தித்துள்ளது. அவரை மீண்டும் எடுக்க மாட்டோம்.. ரசிகர்களை அதிர வைக்கும் பிசிசிஐயின் முடிவு.. தோனிக்கு நெருக்கடி! வெளியீடு இந்த நிலையில் தற்போது ஐசிசி புதிய புள்ளிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒரு நாள் அணிகளுக்கான மற்றும் வீரர்களுக்கான புள்ளிகள் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் பல சுவாரசியமான விஷயங்கள் அடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. பேட்ஸ்மேன் ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. இதில் தொடர்ந்து 886 புள்ளிகளுடன் கோலி முதலிடத்தில் இருக்கிறார். 881 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா இரண...