இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதுவும் 2-வது இன்னிங்சில் வெறும் 36 ரன்னில் சுருண்டு இந்தியா மிக மோசமான சாதனையை பெற்றது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய போட்டியாளர்களின் விவரங்களை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
இந்திய அணி போட்டியாளர்களின் விவரம்:-
ரகானே, மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, விஹாரி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
விராட் கோலி பேறுகால விடுப்பில் சென்றுள்ள நிலையில், அஜின்க்யா ரகானே கேப்டனாக விளையாடுகிறார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக