ஏழைகளுக்கு உதவுங்கள் : போப் ஆண்டவர்
ஏழைகளுக்கு உதவுங்கள் என்று போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு நாதர் பூமியில் அவதரித்த தினத்தை கொண்டாடும் விதமாக கிறிஸ்தவர்கள் இன்று ஆலையங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர். ரோம் நகரில் உள்ள ஆலையத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இன்று சிறப்பு வழிபாடு நடத்தினார். வேட்டிகன் நகரில் உள்ள புகழ்பெற்ற செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் தினத்தன்று சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் சிறப்பு வழிபாடுயில் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக குறைவான அளவில் மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இன்றைய கிறிஸ்துமஸ் செய்தியை போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாசித்தார். அப்போது அவர், “இறைமகன் இயேசு நாதர் நம்மிடையே ஒரு ஏழ்மையான நிலையில் தான் இன்றைய தினத்தில் அவதரித்தார். இதன் மூலம் ஏழைகளும், சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களும் இறைவனின் குழந்தைகள் என்பதை அவர் இந்த உலகிற்கு உணர்த்தினார். ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை நாம் வெளிப்படுத்துவோம். இந்த கிறிஸ்...