இடுகைகள்

ஜூலை, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விராட் கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

படம்
கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், நடிகை பிரியங்கா சோப்ராவும் இன்ஸ்டாகிராமில் பதிவுகளை இட்டு பல கோடிகளை வருவாயாக ஈட்டி வருகின்றனர் என்கிறது ஒரு தனியார் நிறுவனம்.  இன்ஸ்டாகிராமில் மதிப்புமிக்க நட்சத்திரங்களின் பட்டியலை தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இரண்டு இந்தியர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஒருவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இந்த பட்டியலில் 23 இடம் பிடித்துள்ள கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் மதிப்பு, சுமார் ஒரு கோடியே 36 லட்சம் என்கிறது அந்த பட்டியல். பல பிரபலமான விளையாட்டு சாதனங்களை உருவாக்கும் நிறுவனங்களுடன் கைக் கோர்த்துக் கொண்டு பல போஸ்ட்டுகளை விராட் இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.   இந்த பட்டியலில் இருக்கும் இன்னொரு இந்தியர், நடிகை பிரியங்கா சோப்ரா. இந்த பட்டியலில் விராட் கோலியை முந்திய பிரியங்கா, 19வது இடத்தில் உள்ளார். பிரியங்கா சோப்ரா பதிவிடும் ஒவ்வொரு இன்ஸ்டா போஸ்ட்டுக்கும் அவர் வாங்கும் தொகை சுமார் ஒரு கோடியே 86 லட்சம் என கூறப்படுகிறது. பல அழகு சாதன பொருட்களை விற்கும் நிறுவனங்களுடன் கைகோர்த்து, இன்ஸ்டா போஸ்ட்டுகளை பதிவிட்டு வருகிறார் பிரியங்கா சோப்ர...

குவைத்தில் கொடுமைப்படுத்தப்படுவதாக வீட்டு வேலைக்காக சென்ற மதுரை பெண் கதறல்...!

வீட்டுவேலைக்காக குவைத்திற்குச் சென்ற மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், அங்கு தான் சித்திரவதை செய்யப்படுவதாகவும், இந்தியா திரும்ப உதவி செய்யுமாறும் சமூகவலைதளம் மூலம் கோரிக்கை வைத்திருப்பது வைரலாக பரவி வருகிறது. மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மதுரையில் உள்ள தனியார் ஏஜென்சி மூலம் வீட்டு வேலை செய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் குவைத் சென்றுள்ளார். இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் வீடியோ வெளியிட்டுள்ள மகேஸ்வரி, குவைத்தில் தான் அடித்து சித்ரவதை செய்யப்படுவதாகவும், தனக்கு உண்ண உணவோ, ஓய்வோ, ஊதியமோ கொடுக்கப்படுவதில்லை என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். தன்னோடு சேர்த்து 4 பெண்கள் குவைத் அழைத்துவரப்பட்டதாகவும், அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ள மகேஸ்வரி, தங்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். வீட்டு வேலை செய்வதற்காக தான் குவைத் சென்றிருந்த போது, அங்கு தனது கைகள் இரண்டும் ஒடிக்கப்பட்டதாக தாயகம் திரும்பிய திருப்பூர் பெண் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளா...

காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களித்த 2 பாஜக எம்எல்ஏக்கள்!

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற கிரிமினல் சட்டத் திருத்தத்தின் மீதான வாக்கெடுப்பில் காங்கிரஸுக்கு ஆதரவாக பாஜக எம்எல்ஏக்கள் இருவர் வாக்களித்தது பாஜகவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று கமல்நாத் தலைமையில் ஆட்சியமைத்தது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைத்து 7 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அம்மாநில சட்டப்பேரவையில் குற்றவியல் சட்டமசோதா 2019 மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக 122 பேர் வாக்களித்தனர். 230 பேர் கொண்ட மத்திய பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு 121 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த மசோதாவிற்கு சபாநாயகர் ப்ரஜபதி நீங்கலாக ஆதரவாக 120 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 2 பாஜக எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். கர்நாடகாவில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்து, ஆட்சியை பாஜக கைப்பற்றியுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏக்கள் இருவர் காங்கிரஸுக்கு ஆதரவளித்தது பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மைகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயன் திரிபாதி மற...

மும்மொழிக் கொள்கைக்கு அதிமுக எம்எல்ஏ வரவேற்பு!

புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கையை வரவேற்பதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில், குறிப்பாக அதில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை குறித்து பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் அதை வரவேற்று குன்னம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன் பேசியிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முன்னதாக, மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே நடைமுறைபடுத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முதல்வர் ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் அரநரை என்ற பகுதியில் நூலகம் ஒன்றை திறந்து வைத்து பேசிய ஆர்.டி.ராமச்சந்திரன்“தனது மகள் தனியார் பள்ளி ஒன்றில் இந்தி படிப்பதாகவும், தனது கட்சி மும்மொழி கொள்கையை எதிர்ப்பதாலேயே, தானும் அதை எதிர்த்து மக்களை ஏமாற்ற விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், சட்டப்பேரவையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ இந்தியை எதிர்ப...

அரசுப் பள்ளிக்கு சென்று பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர்!

தஞ்சை அருகே அரசுப் பள்ளியில் ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பத்தாம் வகுப்பிற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு கணித பாடம் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து அங்கிருந்த கரும்பலகையில் எழுதி கணிதப் பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மாணவர்களுக்கு கணிதப் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கிக் கூறினார். மாவட்ட ஆட்சியர் அரசுப் பள்ளியில் நுழைந்து மாணவர்களுக்கு பாடம் நடத்திய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது இதற்கு முன்பாக சேலம் முன்னாள் கலெக்டர் ரோகிணி பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தி அனைத்து தரப்பு மக்களாலும் பாரட்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலைக் கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு - பொன்.மாணிக்கவேல்

படம்
சிலைக்கடத்தல் வழக்குகளில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.   சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், பழவலூர் சிலைக்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைக்க முயற்சி நடப்பதாக மனுதாரர் கூறியுள்ளார். அவருடன் கூட்டுசேர்ந்து அதிகார ரீதியில் தன்னை பழிவாங்கும் நோக்கில் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் செயல்படுவதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி, பொன்.மாணிக்கவேல் மற்றும் யானை ராஜேந்திரன் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் பொன்.மாணிக்கவேல் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், யானை ராஜேந்திரன் மனுவை தள்ளுபடி செ...

முன்னாள் பிரதமர்களுக்கு டெல்லியில் அருங்காட்சியகம் - பிரதமர் மோடி அறிவிப்பு

படம்
இந்தியாவை ஆட்சி செய்த முன்னாள் பிரதமர்களுக்கு டெல்லியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் சந்திர சேகர் பற்றி முன்னாள் துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் மற்றும் எழுத்தாளர் ரவிதத் பாஜ்பாய் ஆகியோரால் எழுதப்பட்ட  Chandra Shekhar - The last icon of Ideological politics  என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த முன்னாள் பிரதமர்களை கட்சி வேறுபாடுகளைக் கடந்து கவுரவிக்கும் விதமாகவும், அவர்களது உழைப்பை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாகவும் டெல்லியில் மிகப்பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் பேசிய அவர், நாட்டில் ஜமாத் என்று ஒரு பிரிவு இருக்கிறது. அவர்கள் பிரதமர்கள் மீதான மதிப்பை குழைக்கும் விதமாக மோசமான தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இதனால் அவர்கள் செய்த நன்மைகள் நினைவுகூறப்படாமலேயே போய்விடுகிறது. எடுத்துக்காட்டாக, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் நாட்டுக...

இன்று சிறையில் இருந்து பரோலில் வருகிறார் நளினி!

படம்
மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக வேலூர் சிறையில் இருந்து, நளினி இன்று பரோலில் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக 6 மாத பரோல் வழங்குமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஒரு மாதம் பரோல் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் ஒரு மாத பரோலில் இன்று நளினி விடுவிக்கப்படுகிறார். சத்துவாச்சாரியில் உள்ள உறவினர் வீட்டில் நளினி தங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு சிறைத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

வைகோவை ட்விட்டரில் விமர்சித்த சுப்பிரமணியன்சாமி!

படம்
இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அழிக்கும் நோக்குடனேயே, வைகோ மாநிலங்களவைக்கு வருவதாக, பாஜக மூத்தத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவைக்கு செல்ல உள்ள நிலையில், பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன்சாமி அவரை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், வைகோ கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்றும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிராபகரனின் சித்தாந்தத்தை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அழிக்கும் கிறிஸ்தவ அமைப்புகளின்  திட்டத்துடன், வைகோ மாநிலங்களவைக்குள் நுழைவதாகவும் சுப்பிரமணியன்சாமி குற்றம் சாட்டியுள்ளார்

ஹெல்மெட் வழக்கு: தமிழக உயரதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

படம்
ஹெல்மெட் விதிகளை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உயரதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.  கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக் கோரி ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே உத்தரவிட்டபடி முக்கிய போக்குவரத்து சிக்னல்களில் பதிவான ஒரு நிமிட கண்காணிப்பு கேமரா காட்சிகள் அரசுதரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதைப் பார்த்த நீதிபதிகள், 300க்கும் அதிகமானோர் ஹெல்மெட் அணியாமல் செல்வதையும், அவர்களை தடுக்காமல் காவல்துறையினர் சிலைபோல் நின்று பார்த்துக்கொண்டு நிற்பதையும் பார்க்க முடிவதாக குற்றஞ்சாட்டினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் இடம்பெற்றுள்ள காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், ஹெல்மெட் விதிகளை முழுமையாக செயல்படுத்தாத அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உயரதிகாரிகள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்தன...

பெண்கள் சுய இன்பம் பண்ணுவாங்களா ?

படம்
பெண்கள் சுய இன்பம் பண்ணுவாங்களா ?

சூரியனை ஆய்வு செய்யும் செயற்கைகோள் பற்றிய இஸ்ரோ தலைவரின் தகவல்..!

படம்
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் , சந்திரயான்-2 விண்கலம் 23ம் தேதி முதல் தகவல்களை அளிக்க தொடங்கும் எனவும், ஆனால், நிலவில் உள்ள தகவல்களை பெற இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். திட்டமிட்டப்படி சரியாக தரையிறங்கினால் நிலவில் யாரும் போகாத இடத்தில் சந்திரயான்-2 விண்கலம் நிறுத்தப்படும் என தெரிவித்தார். நிலவின் வடதுருவப் பகுதியைவிட தென்துருவப் பகுதியில் நிழல் அதிகமாக இருக்கும் என குறிப்பிட்ட அவர், அங்கு நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கக்கூடும் எனவும், அது புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு பயனுள்ளதாக அமையும் எனவும் தெரிவித்தார். மேலும், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலத்தை அடுத்தாண்டு முதல் பாதியில் அனுப்பும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதற்கு முன்னதாக மங்கள்யான்-2 திட்டத்திற்கான பணிகள் தொடங்கும் எனத் தெரிவித்தார்.

தங்க. தமிழ்செல்வனை தூண்டில் போட்டு பிடித்தோம் - மு.க.ஸ்டாலின்

படம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்த தங்க.தமிழ்ச்செல்வனை தாங்கள் தூண்டில்போட்டு பிடித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  டிடிவி தினகரனின் நெருங்கிய ஆதரவாளராக இருந்த தங்க.தமிழ்ச் செல்வன் சமீபத்தில் அவரது கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். அப்போது விரைவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அழைத்து தேனியில் பிரம்மாண்ட இணைப்பு விழா கூட்டத்தை நடத்துவேன் எனத் தெரிவித்தார். அதன்படி, தேனியில் தங்க.தமிழ்ச் செல்வன் ஆதரவாளர்கள் மற்றும் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணையும் விழா, இன்று நடைபெற்றது. இந்த இணைப்பு விழா பொதுக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், மாற்றுக் கட்சியில் தங்க.தமிழ்ச் செல்வன் இருக்கும்போதே, சட்டமன்றத்தில் தாம் பேசிய பேச்சுக்களுக்கு உடனுக்குடன் பாராட்டு தெரிவிப்பார் என்று கூறினார். அவரது திறமையை பார்த்து இவரை எப்படியாவது தூண்டில் போட்டு திமுகவிற்குள் இழுக்க தாம் முயன்றதாகவும், ஆனால் தற்போதுதான் தங்க.தமிழ்ச் செல்வன் சிக்கியதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் எழுந்துள்ள சர்ச்சைகளை குறிப்பிட்டு பேசிய மு.க.ஸ...

பல மடங்கு அதிகரிக்கும் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை!

படம்
குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராத தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் பல திருத்தங்களை செய்துள்ள மத்திய அரசு, அதனை இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால், தற்போதுள்ள 2 ஆயிரம் அபராதம் என்ற விதிமுறையை, 10 ஆயிரம் ரூபாய் அபராதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதேபோல், அவசர வாகனங்கள் எனப்படும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறுவர்கள் வாகனங்களை இயக்கி விபத்தை ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கவும், வாகனத்தின் பதிவை ரத்து செய்யவும் சட்ட திருத்தத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் வரை இழப்பீடு வழங்கவும் புதிய சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சாலை விதிமீறல்களுக்கான அபராத தொகையை அதிகபட்சம் ஒரு லட்சம் வரை உயர்த்...

ஓய்வு குறித்து அறிவித்து முற்றுப்புள்ளி வைத்த தோனி!

படம்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்தது முதலாகவே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பேசுபொருளாக மாறியிருப்பவர் மகேந்திர சிங் தோனி. 38 வயதாகிவிட்ட நிலையில் தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என்ற தகவல்கள் தான் சமீபத்திய நாட்களில் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. இதுவரை தோனியோ அல்லது இந்திய கிரிக்கெட் வாரியமோ இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடாத நிலையில் தற்போது தோனியின் ஓய்வு பற்றிய பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான விஷயம் அரங்கேறியுள்ளது. பாரா ரெகிமெட்ண்ட் படையில் இணைய இருப்பதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தான் தற்காலிகமாக அணியில் இடம்பெறமுடியாது என இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தோனி தகவல் அனுப்பியுள்ளார். இதன் மூலம் ஆகஸ்ட் 8ம் தேதி தொடங்கவிருக்கும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனி கலந்துகொள்ள இயலாது என்பது உறுதியாகியுள்ளது. மேற்குஇந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய அணி, 3 டி-20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதற்கான இந்திய அணியை பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு நாளை அறிவிக்க உள்ளது. விமானப்படையின் ப...

தமிழகத்தின் 34, 35வது மாவட்டங்களை அறிவித்திருப்பதால் சரத்குமார் முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்!

படம்
தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்கள் புதியதாக உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழகத்தின் 34, 35வது மாவட்டங்களை அறிவித்திருப்பதற்கு முதலமைச்சரை பாராட்டுவதாக தெரிவித்துள்ளார் சமக தலைவர் சரத்குமார்.   சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு புதிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், 20 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் சர்வதேச மலர்கள் ஏல மையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கூறினார். பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாக நகரங்களில் வார்டுகளிலும், கிராமங்களிலும் நேரடியாக சென்று தீர்வு காண முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாகக் கூறினார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 31 கோடியே 15 லட்சம் செலவில், மீனவ இளைஞர்களுக்கு நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தித்தரப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியான தென்காசி தன...

முத்தலாக் மனுதாரர் இஸ்ரத் ஜஹானுக்கு கொலை மிரட்டல்! இந்து பண்டிகையில் கலந்துகொண்டதுதான் காரணமா?

படம்
முத்தலாக்கிற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்த மேற்குவங்கத்தை சேர்ந்த முஸ்லிம் பெண்மணி இஸ்ரத் ஜஹானுக்கு இந்து பண்டிகையில் கலந்து கொண்டதால் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவின் ஹவுரா நகரைச் சேர்ந்தவர் இஸ்ரத் ஜஹான் (வயது 35), நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய முத்தலாக் விவகாரத்தை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்ற ஐவரில் இவரும் ஒருவர். பின்னர் இவர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். நேற்று மாலை தனது மகனை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தபோது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இஸ்ரத்தை சூழ்ந்து கொண்டு ஆக்ரோஷத்துடன், ஹனுமன் சலிசா என்ற இந்து மத பண்டிகையில் எதற்காக கலந்துகொண்டீர்கள் என்று கேட்டனர். நான் மதச்சார்பற்றவள், நமாஸ் செய்வதற்காக ஹிந்துக்கள் அழைக்கப்படும் போது நான் ஹனுமன் சலிசா நிகழ்ச்சிக்கு செல்வதில் என்ன தவறு என்று பதிலளித்துள்ளார். இருப்பினும் ஹிஜாப் அணிந்துகொண்டு இந்து மத நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தவறு என்றும் மதத்திற்கு அவமரியாதை நேர்ந்து விட்டதாக அங்கு திரண்ட கூட்டத்தினர் இஸ்ரத்திற்கு எதிராக கூச்சல் போட்டுள்ளனர்...

2 பேர் ஆட்டம் தான் அட்டகாசம்.. யாரை சொல்றாரு சச்சின்?

படம்
WORLD CUP 2019 | உலகக்கோப்பையில் யார் நல்லா விளையாடினாங்க?.. சச்சின் பதில் - வீடியோ மும்பை : உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் சிறப்பாக ஆடிய இரண்டு வீரர்கள் இவர்கள் தான் என இருவரை சுட்டிக் காட்டி இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக ஆடினாலும் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த நிலையில், இந்திய அணியில் சிறப்பாக ஆடிய வீரர்கள் யார் என்பது குறித்து தன் 100MB செயலியில் கருத்து கூறி இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர் அரையிறுதி தோல்வி இந்திய அணி உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி தவிர தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தது. அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. யாரை சொல்கிறார் சச்சின்? இந்திய அணியில் சிறப்பாக ஆடிய வீரர்கள் குறித்து பேசிய சச்சின், "உண்மையில், எல்லோரும் அவர்கள் வேலையை சரியாக செய்தார்கள். ஆனால், என்னை தேர்வு செய்யச் சொன்னால் ரோஹித் சர்மா மற்றும் பும்ராவை தேர்வு செய்வேன். அவர்கள் இருவரும் அட்டகாசமாக ஆடின...

இது ஓவியாவுக்கு தெரியுமா? ஆரவுக்கு லிப் லாக் கொடுத்த நடிகை..!

படம்
சென்னை: நடிகர் ஆரவுக்கு நடிகை நிகிஷா பட்டேல் லிப் லாக் கொடுத்தது தெரியவந்துள்ளது. நடிகர் ஆரவ் தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றின் மூலம் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் போதுதான் ஓவியா ஆரவுடன் காதலில் விழுந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் ஓவியாவுக்கு கொடுத்த மருத்துவ முத்தம் பெரும் பெரும் பிரபலமானது. பிக்பாஸ் சீசன் ஒன்றின் டைட்டில் வின்னர் ஆனார் ஆரவ். வெளிநாடுகளில் இதைத்தொடர்ந்து ஆரவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதோடு ஓவியாவும் ஆரவும் வெளிநாடுகளில் சுற்றிவந்தனர். காதல் இல்லை இதுதொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து பதிலளித்த ஓவியா தனக்கும் ஆரவுக்கும் இடையே காதல் இல்லை. நாங்கள் நண்பர்கள்தான் என்றார். ஆரவுக்கு முத்தம் ஓவியாவும் ஆரவும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை நிகிஷா பட்டேல் ஆரவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த தகவல் வெளியாகியுள்ளது. நிகிஷா பட்டேல் அதாவது, நடிகர் ஆரவ் சரண் இயக்கும் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நிகிஷா படேல் ஹீரோயின். இவர் ஏற்கனவே பாஸ்கர் ஒரு ராஸ்கல், உள்ளிட்ட படங்களில் நடித...

முதல்முறையாக உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் வெளியீடு

படம்
உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முதல் முறையாக பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்‌மூலம் மாநில மொழிகளிலும் தீர்ப்புகளை வெளியிடும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளின் விவரங்கள் இந்தி, ஒடியா, அசாமி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. தென்னிந்திய மொழிகளில் கன்னடமும், தெலுங்கும் இடம்பெற்றிருந்த நிலையில், செம்மொழியான தமிழ் இடம்பெறாதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளியிடப்பட்டன. உச்ச நீதிமன்ற கூடுதல் கட்டடத்தின் திறப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல்களை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ராம்நாத் கோவிந்‌த் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களி...

மானநஷ்ட வழக்கு; வெற்றி பெற்றுள்ள கெயில்

படம்
நியூ சவுத் வேல்ஸ்: பிரபல வீரர் கெயில் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு தீர்ப்பை எதிர்த்து ஆஸ்திரேலிய ஊடகம் தாக்கல் செய்த அப்பீல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அப்போது வீரர்கள் ஓய்வறையில் பெண் பத்திரிகையாளரிடம், மேற்கிந்திய தீவுகள் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் தகாத முறையில் சைகை செய்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தச் செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. ஓய்வறையில் இருந்தபோது செய்தியாளர்கள் யாரும் எனது அறைக்கு வரவில்லை. என்னுடன் என்னுடைய சக அணி வீரர் டுவெய்ன் ஸ்மித் உடன் இருந்தார் என்று கெயில் மறுத்தார். மேலும், இந்தச் செய்திகள் தனது நற்பெயருக்கும், மரியாதைக்கும் களங்கம் விளைவிக்கும் செயல் எனக் கூறி ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். முடிவில் கெய்லுக்கு ரூ. 1.44 கோடி நஷ்ட ஈடை தர வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. ஆனால், மற்றொரு பக்கம், நஷ்ட ஈட்டு தொகை போதாது என்றும், எனவே அதை உயர்த்தி தர வேண்டும் என்றும் கெயில் அப்பீல் ச...

என்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா?: வனிதா

படம்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தனக்கு ஏன் வாய்ப்பளித்தார்கள் என்று வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து இரண்டாவது ஆளாக வெளியேற்றப்பட்டார் வனிதா விஜயகுமார். அவர் இவ்வளவு சீக்கிரத்தில் வெளியேற்றப்படுவார் என்று பார்வையாளர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. அவர் கிளம்பிச் சென்ற பிறகு பிக் பாஸ் கொடூர மொக்கையாக இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் குறித்து வனிதா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, குழந்தைகள் தொலைக்காட்சி, செல்போன் இல்லாமல் இருந்தது எனக்கு பெரிய கஷ்டமாக தெரியவில்லை. நான் செல்போனும், கையுமாக இருக்கும் ஆள் இல்லை. என் குழந்தைகளை விட்டுவிட்டு இருந்தது தான் கஷ்டமாக இருந்தது. மேலும் என் மகள் யாருடன் இருப்பது என்பது குறித்த சட்ட பிரச்சனை வேறு சென்று கொண்டிருக்கிறது.. பிக் பாஸ் இவ்வளவு சீக்கிரத்தில் நான் வெளியேற்றப்பட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் நான் தான் வெளியேற்றப்படுவேன் என்று எனக்கு தோன்றியது. என் குழந்தைகளை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி போர் அடிப்பத...

அடுத்த வைரல் வீடியோ viral video

படம்
அடுத்த வைரல் வீடியோ viral video

எவ்ளோ பணம் வேணாலும் தரேன் : Tamil Boy Kidnap Prank | Funny Video

படம்
எவ்ளோ பணம் வேணாலும் தரேன் : Tamil Boy Kidnap Prank | Funny Video

ஏன்மா கோவமா இருக்க | Cute Baby Girl Video | Funny Speech

படம்
ஏன்மா கோவமா இருக்க | Cute Baby Girl Video | Funny Speech

பின்னுக்கு சென்ற இந்திய அணி.. உலகக் கோப்பை தோல்வியால் நேர்ந்த அதிர்ச்சி..

லண்டன்: உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்தது இந்திய அணிக்கு ஐசிசி புள்ளிகள் பட்டியலில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்தியா இதிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி தோல்வியுடன் வெளியேறியது.. லீக் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்ற இந்திய அணி செமி பைனல் போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த தொடரில் அசத்தலாக வெற்றிபெற்று இங்கிலாந்து அணி கோப்பையை வென்றுள்ளது. ஒரு ரன் கூட வித்தியாசம் இல்லாமல் நியூசிலாந்து அணி தோல்வியை சந்தித்துள்ளது. அவரை மீண்டும் எடுக்க மாட்டோம்.. ரசிகர்களை அதிர வைக்கும் பிசிசிஐயின் முடிவு.. தோனிக்கு நெருக்கடி! வெளியீடு இந்த நிலையில் தற்போது ஐசிசி புதிய புள்ளிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒரு நாள் அணிகளுக்கான மற்றும் வீரர்களுக்கான புள்ளிகள் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் பல சுவாரசியமான விஷயங்கள் அடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. பேட்ஸ்மேன் ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. இதில் தொடர்ந்து 886 புள்ளிகளுடன் கோலி முதலிடத்தில் இருக்கிறார். 881 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா இரண...

தோனியின் மேனேஜரே இப்படி சொல்லிவிட்டாரே!

WORLD CUP 2019 | தோனியின் மேனேஜரே இப்படி சொல்லிவிட்டாரே!- தோனியின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து அவரின் மேனேஜர் தெரிவித்த கருத்துக்கள் பெரிய வைரலாகி உள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் அதிகமாக தலைப்புச்செய்தியில் இருந்த வீரர் என்றால் அது கண்டிப்பாக தோனியாகத்தான் இருப்பார். தொடர் முழுக்க பல்வேறு விஷயங்களுக்காக அவர் வைரலானார். தற்போது தொடர் முடிந்த பின்பும் கூட அவரின் ஓய்வு குறித்த செய்திகள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. என்ன ஓய்வு தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பதுதான் தற்போது கிரிக்கெட் உலகில் பெரிய கேள்வியாக உள்ளது. தோனி இன்று ஓய்வு பெற போகிறார், நாளை ஓய்வு பெற போகிறார் என்று பல செய்திகள் இணையம் முழுக்க உலவி வருகிறது. ஆனால் இது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ செய்தி எதுவும் தோனி தரப்பில் இருந்து வெளியாகவில்லை. என்ன சொன்னார் இந்த நிலையில்தான் தற்போது தோனியின் மேனேஜர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், தோனிக்கு இந்திய ராணுவத்தின் மீது தீவிர ஆர்வம் இருக்கிறது. அவர் எப்போது வேண்டுமானாலும் ராணுவத்தில் முழு நேர பணியில் சேர வாய்ப்புள்ளது. இத...

ஏன் தோத்தீங்க..? பிசிசியின் அந்த 7 கேள்விகள்... வசமாக மாட்ட போகும் ரவி சாஸ்திரி, கோலி

மும்பை: கேப்டன் கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரிடம் உலக கோப்பை தோல்வி குறித்து கேட்கப்பட வேண்டிய கேள்வி பட்டியலுடன் பிசிசிஐ காத்துக் கொண்டிருக்கிறது. இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியது. கிரிக்கெட் ரசிகர்களால் எளிதில் ஜீரணிக்க முடியாத தோல்வி இது. அணியில் உள்ள கருத்து வேறுபாடுகள், வீரர்களிடையே பிளவு என ஒட்டுமொத்த குளறு படிகளும் வெளியில் வர ஆரம்பித்து இருக்கின்றன. இந்நிலையில், தோல்வி குறித்து கேப்டன் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் விசாரணை நடத்த பிசிசிஐ முடிவு செய்திருக்கிறது. வருங் காலத்தில் எப்படி செயல்படுவது என்று ஆலோசனை கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. பின்னுக்கு சென்ற இந்திய அணி.. உலகக் கோப்பை தோல்வியால் நேர்ந்த அதிர்ச்சி.. சுதாரிக்க வேண்டும்! 7 கேள்விகள் தயார் அதே நேரத்தில் ரவி சாஸ்திரி மற்றும் கோலியிடம் பல கேள்வி கணைகளை தொடுக்க பிசிசிஐ தயாராகி வருகிறது. அதற்கான கேள்விகளையும் தயாரித்து வைத்திருக்கிறது பிசிசிஐ. முக்கியமாக 7 கேள்விகளை வைத்திருக்கிறது. முடிவுகளை எடுத்தீர்களா? அதில் முக்கியமாக ...

ரோஹித் சர்மா தான் அடுத்த கேப்டன்.. திட்டமிட்டு காய் நகர்த்தல்.. பிசிசிஐ அதிரடி திட்டம்!

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு ரோஹித் ஷர்மாவுக்கு வழங்கப்பட வாய்ப்பு? மும்பை : இந்திய அணியில் விரைவில் கேப்டன்சியில் மாற்றம் நடக்கலாம் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணி 2019 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிச் சுற்றுடன் தோல்வி அடைந்து வெளியேறியது. தோல்விக்குப் பின் இந்திய அணியில் உள்ள குளறுபடிகள் குறித்து பெரும் விவாதம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக விராட் கோலியை ஒருநாள் போட்டிகள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கி விட்டு, ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என கூறப்படுகிறது. தோனி விலகல் கடந்த 2015 உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதிச் சுற்றுடன் வெளியேறியது. அதன் பின், தொடர்ந்து இந்திய அணி விமர்சனத்தை சந்தித்து வந்தது. 2017இல் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். உலகக்கோப்பை ஏமாற்றம் அப்போது 2019 உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் நியமித்தது பிசிசிஐ. ஆனால், இந்திய அணி 2019 உலகக்கோப்பை தொடரிலும் அரையிறுதியுடன் திரும்பி உள்ளது. இதனால், பிசிசிஐ ஏமாற்றத்தில் உள்ளது. கேப்டன் மாற்றம் ஆக்ரோஷமாக இருக்கும் விராட் க...

கொக்கி செய்யும் காகங்கள்: விலங்குகளின் பேரரசில் புதிய தொழில்நுட்ப பரிணாமம்

தொழில்நுட்பங்களில் திருப்புமுனைகளை உருவாக்கியதற்கான முதல் அடிப்படைகளை நாம் அறிந்துகொள்வதற்கு தாங்களாகவே கருவிகளை தயாரிக்கும் கலேடோனிய காகங்கள் உதவுகின்றன. பசிஃபிக்பெருங்கடலின் தெற்கு பகுதியிலுள்ள டஜன் கணக்கான தீவுகளை உள்ளடக்கியதுதான் பிரான்ஸ் நாட்டின் கீழுள்ள நியூ கலேடோனியா. செடிகளில் இருந்து கிடைகின்ற பொருட்களை கொண்டு நியூ கலேடேனிய காகங்கள் எளிதாக கொக்கிகளை செய்கின்றன. அவற்றை பூச்சிகளின் முட்டை புழுக்கள் மற்றும் சிலந்திகளை பிடிப்பதற்கு பயன்படுத்துகின்றன. சாதாரண சிறியதொரு கிளை போன்ற மாற்று கருவியைவிட இத்தகைய கொக்கியாலான கருவிகள் 10 மடங்கு விரைவாக உணவைத் தேட உதவுகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. துருக்கியின் விசில் 'பறவை மொழிக்கு' ஆபத்து வெளிச்சத்திற்கு வந்தது டோடோ ராட்சத பறவையின் ரகசிய வாழ்க்கை! இந்த கொக்கிகளின் செயல்திறனை அளவிட்டு, இந்த கருவி பரிணமித்து வருகின்ற தகவல்கள் சிலவற்றை விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்கு மேலாக, விலங்குகளின் பேரரசில் புதிய தொழில்நுட்ப பரிணாமத்தின் முதல் தருணத்தை பற்றி விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இவர்களின் ஆய்வு முடிவுகள் எல்லாம் "நேச்சர் எக்காலஜி ம...

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாசகர் விரும்பும் செய்தியை வழங்குகிறோம்: டெய்லிஹன்ட் தலைவர் உமங் பேடி

படம்
டெல்லி: இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்தும், மக்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் விரைவாக வளர்ந்துள்ளதுடன், நாட்டு மக்கள் செய்தியை அணுகும் விதமும் மாறியுள்ளது. சமீப காலமாக பயனர் நடத்தை, எவ்வாறு உருவாகியுள்ளது என்பது பற்றி விரிவாக விளக்கி எடுத்துரைத்தார் 'டெய்லிஹன்ட்' தலைவர் உமங் பேடி. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிராந்திய மொழி செய்திகளை "ஆழ்ந்த தனிப்பயனாக்குதல்" வாயிலாக வழங்குவது தொடர்பாக 'சிஎன்பிசி டிவி 18' டிவி சேனலுக்கு வழங்கிய பேட்டியில், உமங் பேடி விளக்கமாக தெரிவித்தார். டெய்லிஹன்ட், என்பது செய்திகளை ஒருங்கிணைப்பது மட்டுமல்ல என்றும், "செய்திகளை கண்டுபிடிப்பதற்கான இடம்" என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: பயனர் தனியுரிமை அல்லது விவரங்களில் எந்த ஒரு சமரசமும் செய்யாமல் ஆழ்ந்த தனிப்பயனாக்குதலுடன் செய்திகளை வழங்கும் திறனை டெய்லிஹன்ட் கொண்டுள்ளது. இது பயனாளர்கள் உருவாக்கும் செய்தி கட்டுரை கிடையாது, தொழில்முறைப்படி உருவான செய்தி கட்டுரை. செய்திகள் சேகரிப்பு பற்றி சொல்ல வேண்டுமானால், எங்களுக்கு, 10,000 மேற்பட்ட, செய்தியாளர்கள் இந்தியா...

5ஜி தொழில்நுட்பம், தரவுகளை சேமிக்கும் விவகாரங்கள்.. பிரிக்ஸ் நாடுகளுடன் இந்தியா தீவிர ஆலோசனை

படம்
ஒசாகா: ஜி 20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள மோடி தரவுகளை சேமிப்பது மற்றும் 5ஜி நெட்வொர்க் போன்ற தொழில்நுட்ப விஷயங்களில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் ஜப்பானை தவிர்த்து விட்டு, பிரிக்ஸ் நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள உலக தலைவர்கள் பலரையும் இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்த மோடி, ஈரான் விவகாரம் வர்த்தகம் பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு தரவுகளை சேமிக்கும் தொழில்நுட்பம், 5ஜி தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து விவாதித்தார். அப்போது மோடிக்கு பதிலளித்த ட்ரம்ப் தரவுகளை சேமிப்பதை உள்நாட்டிலேயே வைத்து கொண்டால் என்ன என்று பிரதமரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மோடி அதிருப்தியடைந்ததாக தெரிகிறது. இதனையடுத்து தரவுகளை சேமிப்பது மற்றும் 5ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில், ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் உதவியை நாட முயற்சிப்பதை விட பிற வளர்ந்த நாடுகளிடம் பேச்சு நடத்த மோடி முடிவு செய்தார். இதனையடுத்து வர்த்தக சிக்கல்களை தீர்க்க அமெரிக்கா மற்றும்...

நேபாள வெள்ளத்தில் 67 பேர் பலி

படம்
நேபாளத்தில் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 67 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து 5 நாட்களாக பெய்து வரும் பருவமழை அந்த பகுதியை முற்றிலுமாக வெள்ளமயமாக்கியது.  

அமேசானில் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்க திட்டமா? - இதனை தெரிந்து கொள்ளுங்கள்

படம்
அமேசான் தள்ளுபடி விற்பனை அமேசான் தனது வருடாந்தர தள்ளுபடி விற்பனையை தொடங்கி உள்ள இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான அமேசான் ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஜெர்மனியில் 2000 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் உள்ள ஊழியர்கள் ஆறு மணி நேர போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமேசான் தொழிற்சங்கம் கூறுகிறது. அதிக பணி சுமைதான் இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணமென்று கூறப்படுகிறது.

இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டது

படம்
இந்தியாவுடனான பிரச்சனையின் காரணமாக ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த விமானத்திற்கான வான்வெளியை பாகிஸ்தான் இன்று திறந்தது. வான்வெளி மூடப்பட்டதால் இந்திய விமானங்கள் வேறு பாதையில் செல்ல நேரிட்டதால் பல மில்லியன் டாலர்கள் கூடுதலாக விமான நிறுவனங்களுக்கு செலவானது. இதன் காரணமாக ஏர் இந்தியா மோசமான நஷ்டத்தை சந்தித்தது. பயங்கரவாத பயிற்சி முகாமை எதிர்த்து நடத்தப்பட்டதாக கூறப்படும் பாலகோட் வான்வெளி தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் பிப்ரவரி மாதம் இந்த வான்வெளியை மூடியது. இந்தத் தாக்குதல் இந்திய கட்டுபாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்குப் பதிலடியாக நடந்தது. இந்த தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலி ஆயினர். பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தான் வான்வெளியை மூடியவுடன் பாகிஸ்தான் வழியாக செல்லவிருந்த விமானங்கள் மாற்றுப் பாதையில் மாற்றிவிடப்பட்டன. அனைத்து விதமான விமானத்திற்காகவும் வான்வெளி திறக்கப்பட்டுவிட்டது என அதிகாரப்பூர்வ விமான வலைதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் வான்வெளியை மூடியதால் இந்திய நிறுவனங்களான ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் கோஏர் போன்ற நிறு...

இணையத்தில் கசிந்தது விஜய்யின் பிகில் பட பாடல்! தளபதி ரசிகர்கள் ஷாக்

படம்
விஜய்யின் 63வது படமாக உருவாகியுள்ளது பிகில். அட்லீ இயக்கியுள்ள இப்படத்தை கத்தி படத்திற்கு பின்னர் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானதை தொடர்ந்து இப்பட டீசருக்காக காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு இன்ப செய்தியாக இப்பட பர்ஸ்ட் சிங்கிள் ட்ராகாக வெறித்தனம் என்ற பாடலை விஜய் பாடவுள்ளார் என்ற தகவல் கிடைத்தது. இந்நிலையில் பிகில் படத்தில் இருந்து பாடல் ஒன்று இணையத்தில் கசிந்தவிட்டதாக சில மணிநேரங்களுக்கு முன்பு இருந்தே வதந்தி ஒன்று பரவி வந்த நிலையில் 1 நிமிடம் 7 வினாடிகள் ஓடக்கூடிய சிங்கப்பெண்ணே என தொடங்கிய பாடல் ஒன்று பிகில் பட பாடல் என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

ஷங்கரின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் இவரா? ரசிகர்களின் மிக பேவரட் ஹீரோயின்

படம்
ஷங்கர் தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியளவிற்கு கொண்டு சென்றவர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஷங்கர் அடுத்து இந்தியன் 2ம் பாகம் எடுக்க முடிவு செய்துள்ளார், இப்படம் இரண்டு வருடமாக கிடப்பில் கடந்து தற்போது ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், இப்படத்தில் தற்போது பிரபலமாக இருக்கும், ப்ரியா பவானிஷங்கரை இதில் கமிட் செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றதாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 6 ஆயிரம் இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி

படம்
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள குரூப் 4 பிரிவிற்கு உட்பட்ட 6000க்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு 14 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 6 ஆயிரம் இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி டிஎன்பிஎஸ்சி-யின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) ஆகிய பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுகளை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில், வரும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதியன்று குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது. மொத்தம், 6,491 காலிப் பணியிடங்களை நிரப்ப இத்தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான கடந்த ஜூலை 14ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் மொத்தம் 14 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, விண்ணப்பிப்பதற்கான கடைசி இரண்டு நாட்களில் மட்டும் 4 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

அஸ்ஸாமில் வெள்ளத்தால் பேரழிவு: 4 ஆயிரம் கிராமங்கள் நீரில் மூழ்கியது.. 45 லட்சம் பேர் பாதிப்பு

படம்
குவகாத்தி: அஸ்ஸாமில் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. அங்கு 30 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. புகழ் பெற்ற காஸிரங்கா தேசிய பூங்கா 90 சதவீதம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மாபுத்திரா உள்ளிட்ட 10 ஆறுகளில் கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதன் காரணமாக அஸ்ஸாமின் 33 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதைடுத்து அஸ்ஸாமிற்கு வெள்ளத்தில் இருந்து மீண்டு வர மத்திய அரசு தேவையான உதவியை செய்யும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்தா சோனாவாலிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி உறுதி அளித்தார். அஸ்ஸாமில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இதுவரை 42லட்சத்து 87 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 157 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. 30 மாவட்டங்களில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 211 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தால் நாசமாகி உள்ளன என்று அஸ்ஸாம் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ஏராமான சாலைகள், பாலங்கள்,கட்டிடங்கள், வீடுகள் எ...