டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 6 ஆயிரம் இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள குரூப் 4 பிரிவிற்கு உட்பட்ட 6000க்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு 14 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பித்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 6 ஆயிரம் இடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி

மொத்தம், 6,491 காலிப் பணியிடங்களை நிரப்ப இத்தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான கடந்த ஜூலை 14ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இதில் மொத்தம் 14 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, விண்ணப்பிப்பதற்கான கடைசி இரண்டு நாட்களில் மட்டும் 4 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

டிஎன்பிஎஸ்சி-யின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) ஆகிய பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுகளை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில், வரும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதியன்று குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது.
மொத்தம், 6,491 காலிப் பணியிடங்களை நிரப்ப இத்தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான கடந்த ஜூலை 14ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இதில் மொத்தம் 14 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, விண்ணப்பிப்பதற்கான கடைசி இரண்டு நாட்களில் மட்டும் 4 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக