KPY சரத்தின் அழகிய குடும்ப புகைப்படங்கள் வைரல்
KPY சரத்தின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இனையாவசிகளின் கவனத்தை ஈர்த்து செம வைரல் ஆக பரவி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இன்று காமெடி நடிகர்களாக உருமாறியுள்ள பிரபலங்கள் பலரும் உள்ளனர்.

அப்படி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சரத்.

அந்த நிகழ்ச்சியில் தீனாவுடன் இணைந்து இவர் செய்த காமெடிகள் யாராலும் மறக்க முடியாது.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தீனாவின் பார்ட்னராக இருந்த சரத் பார்ப்பதற்கு அச்சு அசல் அப்படியே திரைப்பட நடிகர் மொட்டை ராஜேந்தர் போல இருப்பார்.

இவர் தீனாவுடன் மொட்டை ராஜேந்திரன் பேசி வசதி காமெடிகள் செய்திருந்தார்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு முன்பாகவே விஜய் டிவியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான வெற்றி தொடரான கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் சரத் நடித்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒரு சில சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.

இருந்தாலும் இவர் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தான் .

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

இவருக்கு இன்று முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இப்படி பிசியாக இருக்கும் சரத்திற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு கிருத்திகா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

தற்போது சரத்தின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


கருத்துகள்
கருத்துரையிடுக