பலரும் பார்த்திராத நடிகர் மிர்ச்சி சிவாவின் திருமணம் புகைப்படங்கள்
பலரும் பார்த்திராத நடிகர் மிர்ச்சி சிவாவின் திருமணம் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் நடிகர் மிர்ச்சி சிவா. இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே ரேடியோ மிர்ச்சியில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றியவர்.

1988 ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டையில் பிறந்த இவர் பத்தாம் வகுப்பு வரை தான் படித்துள்ளார். அதன் பிறகு சென்னை வந்து சின்ன சின்ன நாடகங்களில் கலந்து கொண்டு தனது நடிப்பை வெளிப்படுத்தினார்.


சிவா என்று சொன்னவுடன் அனைவர் நினைவுக்கும் வருவது அவரின் நடனம் தான். இந்த ரேடியோ ஜாக்கி வேலையை பார்த்துக் கொண்டே படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார்.


2001 ஆம் ஆண்டு ஷாம் நடிப்பில் வெளியான 12B என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்தார். அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து விசில் திரைப்படத்தில் நடித்தார்.


ஆனால் இவருக்கு படங்களில் பெரிய வரவேற்பு கிடைக்காததால் மீண்டும் தனது ரேடியோ ஜாக்கி வேலையை தொடர்ந்தார்.


அதன் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் சிவாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.


அதனைத் தொடர்ந்து சரோஜா என்ற திரைப்படத்திலும் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. பின்னர் சிவா தமிழ் படம் என்ற திரைப்படத்திலும் நடித்தார்.


அதனைத் தொடர்ந்து நடிகர் விமலுடன் இணைந்து சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு திரைப்படத்தில் நடித்த நிலையில் அந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.


இந்த வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்து தில்லுமுல்லு 2, சொன்னா புரியாது, யா யா மற்றும் வணக்கம் சென்னை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.


தற்போது இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரியா என்ற பேட்மிட்டன் வீராங்கனையை திருமணம் செய்து கொண்டார்.


நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

அதே சமயம் சிவாவின் மனைவி நடிகர் அஜித்திற்கு நெருங்கிய சொந்தக்காரர். இந்நிலையில் மிர்ச்சி சிவாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.


கருத்துகள்
கருத்துரையிடுக