தன்னுடைய தாயின் ஆசைக்காக கோயில் கட்டிய பிரபல வில்லன் நடிகர்

தன்னுடைய தாயின் ஆசைக்காக கோயில் கட்டிய பிரபல வில்லன் நடிகர்யின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

நடிகர் டேனியல் பாலாஜி படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

இவர் 2000ஆம் ஆண்டு வெளியான “சித்தி” சீரியல் மூலம் தான் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.

இவர் வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வட சென்னை போன்ற பல படங்களில் வில்லனாக நடித்து உள்ளார்.

2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஏப்ரல் மாதத்தில்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.

இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

நடிகர் டேனியல் பாலாஜி மறைந்த நடிகர் முரளியின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது நடிகர் டேனியல் பாலாஜி கட்டிய கோயிலின் வீடியோ ஒன்று இணையத்தில் படுவைரலானது.

இது குறித்த தகவல்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.  அதாவது இவர் தனது தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்னை ஆவடியில் அங்காளபரமேஸ்வரி ஆலயம் ஒன்றை கட்டி முடித்துள்ளார்.

மேலும் இந்தக் கோயிவை தனது சொந்த செலவில் அவர் கட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தக்கோயிலின் கும்பாபிஷேகம் 2019ல் நடைபெற்றது என்றும்,

இந்தக் கோயிலை அவர் தனது தாயின் ஆசைக்காக கட்டியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

தற்பொழுது இந்த கோயிலின் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துளியும் ஆபாசம் இல்லாத அற்புதமான நடனம்👌👌👌 லட்சம் தடவை பார்த்தாலும் சலிக்காத நடனம் 👌👌👌

இன்று தந்தையர் தினத்தை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள்

‘நாடோடிகள்’ பட ஹீரோயின் அனன்யாவின் குடும்ப புகைப்படங்கள்