பிரபல நடிகர் சத்யராஜ் திருமண புகைப்படங்கள்

பிரபல நடிகர் சத்யராஜ் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

வில்லன் நடிகராக, தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, கதாநாயகனாக உயர்ந்தவர் நடிகர்  சத்யராஜ்.

இவர் நடிப்பின் மீது கொண்ட பற்று காரணமாக இன்று வரை தலை சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார்.

பெரியாரின் மீது அதிக பற்று கொண்டவர். இவர் தந்தை பெரியாரின் திரைப்படத்தை ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என  பல மொழி திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார்.

அதேபோல கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராக எப்பொழுதும் குரல் கொடுப்பவர் நடிகர் சத்யராஜ்.

நடிகர் சத்யராஜ் மகேஸ்வரி என்பவரை 1989ல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு சிபி சத்யராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர் .

தனது தந்தையை போன்று நடிகர் சத்யராஜின் மகனும் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

நடிகர் சத்யராஜ் மகளான திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார்.

தற்பொழுது நடிகர் சத்யராஜின் பலரும் பார்த்திடாத திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் சத்யராஜா இது?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துளியும் ஆபாசம் இல்லாத அற்புதமான நடனம்👌👌👌 லட்சம் தடவை பார்த்தாலும் சலிக்காத நடனம் 👌👌👌

இன்று தந்தையர் தினத்தை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள்

‘நாடோடிகள்’ பட ஹீரோயின் அனன்யாவின் குடும்ப புகைப்படங்கள்