நடிகர் நெப்போலியனின் குடும்ப புகைப்படங்கள்
நடிகர் நெப்போலியனின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையாயவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறதஹு.
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தை வெகுவாக கவர்ந்த நடிகர் நெப்போலியன். இவர் அந்த காலகட்டத்தில் நடிப்பில் கொடிகட்டி பறந்தவர்.

பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வரை வில்லன் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தாலும் ஒரு சில படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தற்போது தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் வசித்து வருகின்றார்.

இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும் தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.


அவரின் மூத்த மகன் தனுசுக்காக அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளார். சிறிது காலம் பிரேக் எடுத்துக் கொண்ட நெப்போலியன் தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து சினிமாவில் கலக்கி வருகிறார்.


தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மூத்த மகனான தனுஷ் நடக்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அமெரிக்காவில் அவருக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டு வருகிறது.


அவருக்காக தான் மொத்த குடும்பமும் அமெரிக்காவில் செட்டிலாகி உள்ளன.


கடந்த 23 வருடங்களாக அமெரிக்காவில் ஐடி கம்பெனி நடத்திக் கொண்டு அதே சமயம் விவசாயமும் செய்து வருகிறார் நெப்போலியன்.


இந்நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியனின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.


கருத்துகள்
கருத்துரையிடுக