லால் சலாம் பட குழுவுக்கு விருந்து வைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
லால் சலாம் பட குழுவுக்கு விருந்து வைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் யின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இஙுயவாசிகளை கவன்ற்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால் கடந்த வருடம் ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

இருந்தாலும் தங்களின் இரண்டு பிள்ளைகளுக்காக விவாகரத்து செய்யாமல் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கத்திலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஜிம் ஒர்க் அவுட் வீடியோ புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

இதனிடையே தற்போது ஐஸ்வர்யா ரஜினி லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்ட பலரும் நடித்த வரும் இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்தநிலையில் தமிழ் புத்தாண்டுக்கு ஐஸ்வர்யா லால் சலாம் பட குழுவுக்கு விருந்து வைத்துள்ளார்.

அந்த விழாவில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியின் மகன்கள் இருவரும் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


கருத்துகள்
கருத்துரையிடுக