காமெடி நடிகர் முனீஷ்காந்தின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
காமெடி நடிகர் முனீஷ்காந்தின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து செம வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை குறைந்த திரைப்படங்களில் நடித்து வெகுவாக கவர்ந்த காமெடி நடிகர்களில் ஒருவர்தான் முனீஸ்காந்த் ராமதாஸ்.

கடந்த 202ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த இவர் தமிழ் திரைப்பட துறையில் நடிகராக வேண்டும் என்ற கனவோடு வந்தார்.

ஆனால் இவருக்கு சிறு சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு மட்டுமே முதலில் கிடைத்தது.

அதன் பிறகு இரண்டு வருடங்கள் தங்க தட்டான் வேலைக்கு மலேசியா நாட்டிற்கு சென்ற இவர் சென்னை திரும்பியதும் குறும்படம் நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கினார்.

இவர் வடபழனி முருகன் கோவிலில் தான் பல நாட்களை கழித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் நடைபெற்ற நாளைய இயக்குனர் என்ற குறும்படம் திரையிடும் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றார்.

தனது நெருங்கிய நண்பரான காளி வெங்கட் மூலம் ராமின் வெற்றி படைப்பான முண்டாசுபட்டி என்ற குறும்படத்தின் கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்தார்.

முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் நடித்த போதே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.

இந்தத் திரைப்படம் வெற்றி பெறவே இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன.

அதனைத் தொடர்ந்து ஜிகர்தண்டா, இன்று நேற்று நாளை, பத்து என்றதுக்குள்ள, மரகத நாணயம்,மாநகரம் மற்றும் பசங்க 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவரின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.

இவர் தமிழ் திரைப்படத் துறையில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.

இவர் தேன்மொழி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவரின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக