எனது கிராம சபை கூட்டத்தை யாராலும் தடுக்க முடியாது : ஸ்டாலின்
எனது கிராம சபை கூட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மரக்காணத்தில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தை இயக்கயோடு இணைத்து பாடுபடுகிறேன். நேரடியாக அரசியலுக்கு வரவில்லை; சிறு வயதிலிருந்து இயக்க உணர்வோடு இயக்க வழியாக பதவிக்கு வந்தேன்.
பிரதம மந்திரி மோடியால் கூட மக்கள் கிராம சபை கூட்டத்தை தடுக்க முடியாது என கூறினார்.
முன்னதாக, கிராம சபை கூட்டம் என்ற பெயரில் அரசியல் இயக்ககள் பொதுக்கூட்டம் நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இதையடுத்து தி.மு.கவின் கிராம சபை கூட்டங்கள் இனி மக்கள் கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் நடத்தப்படும் என கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக