ஜனவரியில் இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்


அடுத்தது வரும் 2021-ஆம் ஆண்டு, ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்-பட உள்ளது. இதனை அடுத்து, தலைநகர் தில்லியில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குடியரசு தினவிழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றிவைக்கிறார்.





இத-னிடையே கடந்த நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது கொரோனா தொற்றுநோய், காலநிலை மாற்றம் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் பேசிநர் . அப்போது இங்கிலாந்து பிரதமர் ஜான்சனுக்கு, இந்தியாவுக்கு வருமாறு முறையாக அழைப்பு மோடி விடுத்தார். போரிஸ் ஜான்சன், தனது பங்கிற்கு அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் ஜி -7 உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடியை அழைத்துள்ளார்.






இந்நிலையில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜனவரி-யில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகிறார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட தகவலில், இந்திய குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வரஉள்ளார் என்று தெரிவித்தார்.





இதன்மூலம் இந்திய குடியரசு தினவிழாவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பில் கடைசியாக 1993-ம் ஆண்டு கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் ஜான் மேஜர் ஆவார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துளியும் ஆபாசம் இல்லாத அற்புதமான நடனம்👌👌👌 லட்சம் தடவை பார்த்தாலும் சலிக்காத நடனம் 👌👌👌

இன்று தந்தையர் தினத்தை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள்

‘நாடோடிகள்’ பட ஹீரோயின் அனன்யாவின் குடும்ப புகைப்படங்கள்