இடுகைகள்

விராட் கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

படம்
கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், நடிகை பிரியங்கா சோப்ராவும் இன்ஸ்டாகிராமில் பதிவுகளை இட்டு பல கோடிகளை வருவாயாக ஈட்டி வருகின்றனர் என்கிறது ஒரு தனியார் நிறுவனம்.  இன்ஸ்டாகிராமில் மதிப்புமிக்க நட்சத்திரங்களின் பட்டியலை தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இரண்டு இந்தியர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஒருவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இந்த பட்டியலில் 23 இடம் பிடித்துள்ள கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் மதிப்பு, சுமார் ஒரு கோடியே 36 லட்சம் என்கிறது அந்த பட்டியல். பல பிரபலமான விளையாட்டு சாதனங்களை உருவாக்கும் நிறுவனங்களுடன் கைக் கோர்த்துக் கொண்டு பல போஸ்ட்டுகளை விராட் இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.   இந்த பட்டியலில் இருக்கும் இன்னொரு இந்தியர், நடிகை பிரியங்கா சோப்ரா. இந்த பட்டியலில் விராட் கோலியை முந்திய பிரியங்கா, 19வது இடத்தில் உள்ளார். பிரியங்கா சோப்ரா பதிவிடும் ஒவ்வொரு இன்ஸ்டா போஸ்ட்டுக்கும் அவர் வாங்கும் தொகை சுமார் ஒரு கோடியே 86 லட்சம் என கூறப்படுகிறது. பல அழகு சாதன பொருட்களை விற்கும் நிறுவனங்களுடன் கைகோர்த்து, இன்ஸ்டா போஸ்ட்டுகளை பதிவிட்டு வருகிறார் பிரியங்கா சோப்ர...

குவைத்தில் கொடுமைப்படுத்தப்படுவதாக வீட்டு வேலைக்காக சென்ற மதுரை பெண் கதறல்...!

வீட்டுவேலைக்காக குவைத்திற்குச் சென்ற மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், அங்கு தான் சித்திரவதை செய்யப்படுவதாகவும், இந்தியா திரும்ப உதவி செய்யுமாறும் சமூகவலைதளம் மூலம் கோரிக்கை வைத்திருப்பது வைரலாக பரவி வருகிறது. மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மதுரையில் உள்ள தனியார் ஏஜென்சி மூலம் வீட்டு வேலை செய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் குவைத் சென்றுள்ளார். இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் வீடியோ வெளியிட்டுள்ள மகேஸ்வரி, குவைத்தில் தான் அடித்து சித்ரவதை செய்யப்படுவதாகவும், தனக்கு உண்ண உணவோ, ஓய்வோ, ஊதியமோ கொடுக்கப்படுவதில்லை என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். தன்னோடு சேர்த்து 4 பெண்கள் குவைத் அழைத்துவரப்பட்டதாகவும், அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ள மகேஸ்வரி, தங்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். வீட்டு வேலை செய்வதற்காக தான் குவைத் சென்றிருந்த போது, அங்கு தனது கைகள் இரண்டும் ஒடிக்கப்பட்டதாக தாயகம் திரும்பிய திருப்பூர் பெண் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளா...

காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களித்த 2 பாஜக எம்எல்ஏக்கள்!

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற கிரிமினல் சட்டத் திருத்தத்தின் மீதான வாக்கெடுப்பில் காங்கிரஸுக்கு ஆதரவாக பாஜக எம்எல்ஏக்கள் இருவர் வாக்களித்தது பாஜகவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று கமல்நாத் தலைமையில் ஆட்சியமைத்தது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைத்து 7 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அம்மாநில சட்டப்பேரவையில் குற்றவியல் சட்டமசோதா 2019 மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக 122 பேர் வாக்களித்தனர். 230 பேர் கொண்ட மத்திய பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு 121 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த மசோதாவிற்கு சபாநாயகர் ப்ரஜபதி நீங்கலாக ஆதரவாக 120 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 2 பாஜக எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். கர்நாடகாவில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்து, ஆட்சியை பாஜக கைப்பற்றியுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏக்கள் இருவர் காங்கிரஸுக்கு ஆதரவளித்தது பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மைகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயன் திரிபாதி மற...

மும்மொழிக் கொள்கைக்கு அதிமுக எம்எல்ஏ வரவேற்பு!

புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கையை வரவேற்பதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில், குறிப்பாக அதில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை குறித்து பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் அதை வரவேற்று குன்னம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன் பேசியிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முன்னதாக, மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே நடைமுறைபடுத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முதல்வர் ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் அரநரை என்ற பகுதியில் நூலகம் ஒன்றை திறந்து வைத்து பேசிய ஆர்.டி.ராமச்சந்திரன்“தனது மகள் தனியார் பள்ளி ஒன்றில் இந்தி படிப்பதாகவும், தனது கட்சி மும்மொழி கொள்கையை எதிர்ப்பதாலேயே, தானும் அதை எதிர்த்து மக்களை ஏமாற்ற விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், சட்டப்பேரவையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ இந்தியை எதிர்ப...

அரசுப் பள்ளிக்கு சென்று பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர்!

தஞ்சை அருகே அரசுப் பள்ளியில் ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பத்தாம் வகுப்பிற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு கணித பாடம் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து அங்கிருந்த கரும்பலகையில் எழுதி கணிதப் பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மாணவர்களுக்கு கணிதப் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கிக் கூறினார். மாவட்ட ஆட்சியர் அரசுப் பள்ளியில் நுழைந்து மாணவர்களுக்கு பாடம் நடத்திய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது இதற்கு முன்பாக சேலம் முன்னாள் கலெக்டர் ரோகிணி பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தி அனைத்து தரப்பு மக்களாலும் பாரட்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலைக் கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு - பொன்.மாணிக்கவேல்

படம்
சிலைக்கடத்தல் வழக்குகளில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.   சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், பழவலூர் சிலைக்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைக்க முயற்சி நடப்பதாக மனுதாரர் கூறியுள்ளார். அவருடன் கூட்டுசேர்ந்து அதிகார ரீதியில் தன்னை பழிவாங்கும் நோக்கில் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் செயல்படுவதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி, பொன்.மாணிக்கவேல் மற்றும் யானை ராஜேந்திரன் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் பொன்.மாணிக்கவேல் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், யானை ராஜேந்திரன் மனுவை தள்ளுபடி செ...

முன்னாள் பிரதமர்களுக்கு டெல்லியில் அருங்காட்சியகம் - பிரதமர் மோடி அறிவிப்பு

படம்
இந்தியாவை ஆட்சி செய்த முன்னாள் பிரதமர்களுக்கு டெல்லியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் சந்திர சேகர் பற்றி முன்னாள் துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் மற்றும் எழுத்தாளர் ரவிதத் பாஜ்பாய் ஆகியோரால் எழுதப்பட்ட  Chandra Shekhar - The last icon of Ideological politics  என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த முன்னாள் பிரதமர்களை கட்சி வேறுபாடுகளைக் கடந்து கவுரவிக்கும் விதமாகவும், அவர்களது உழைப்பை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாகவும் டெல்லியில் மிகப்பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் பேசிய அவர், நாட்டில் ஜமாத் என்று ஒரு பிரிவு இருக்கிறது. அவர்கள் பிரதமர்கள் மீதான மதிப்பை குழைக்கும் விதமாக மோசமான தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இதனால் அவர்கள் செய்த நன்மைகள் நினைவுகூறப்படாமலேயே போய்விடுகிறது. எடுத்துக்காட்டாக, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் நாட்டுக...