இயற்கை விவசாயத்தில் களமிறங்கிய நடிகர் கிஷோர்
இயற்கை விவசாயத்தில் களமிறங்கிய நடிகர் கிஷோர் இன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணைய வாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளவர் நடிகர் கிஷோர். இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று சூப்பர் ஹிட் வெற்றி அடைந்தது. குறிப்பாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ மற்றும் ரஜினி நடுவில் வெளியான’ கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். வில்லன், குணச்சித்திரம் என எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் பொருந்தி போகிறவர் நடிகர் கிஷோர். அலட்டல் இல்லாமல் அழுத்தமாக முத்திரையை பதிப்பவர். இவர் இயற்கை விவசாயத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். நடிகை கிஷோர் விஷாலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான உணவை தங்களை உற்பத்தி செய்து கொள்ள விவசாய முறையை தேர்ந்தெடுத்துள்ளனர். தனது சூட்டிங் முடிந்த மீதி நேரம் இவர் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் சமீபத்தில் அள...