இனி செவ்வாழை வாங்கும்போது உஷாராக இருங்கள்....
உணவுப் பொருட்களில் கலப்படம் என்பது ஒரு பெரிய குற்றம் பார்க்கப்படும் நிலையில். அதிலும் முக்கியமாக சிறியவர் முதல், பெரியவர்கள் வரை பயன்படுத்தம் பால், பழம் போன்ற பொருட்களில் செய்யக்கூடிய கலப்படம் என்பது மன்னிக்க முடியாத குற்றம்தான். அப்படியாக ஒரு கலப்படம் தொடர்பான வீடியோ இப்போது வைரலாக சுற்றி வந்துகொண்டிருக்கிறது. உணவுப் பொருட்களில் எத்தனையோ வகையான கலப்படங்களை நாம் இதற்கு முன்பாக பார்த்திருக்கின்றோம். ஆனால் இது மிக மிக நூதனமாக உள்ளது, இப்படியும் கூட நடக்க முடியுமா என்று அதிர்ச்சியாகவும் உள்ளது. என்ன கலப்படம் என்கிறீர்களா? சாதாரண நாட்டு வாழைப்பழத்தை கலர் பூசி, செவ்வாழை பழம் என்று விற்பனை செய்து வருகிறது ஒரு கும்பல். இது தொடர்பாக ஒரு வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் செவ்வாழைப் பழம் போன்று இருக்கக்கூடிய ஒரு வாழைப்பழத்தை ஒருவர் எடுத்து சோப்பு போட்டு அதன் தோலை தண்ணீரால் கழுவி விட, அதிர்ச்சியளிக்கும் வகையில் தோலில் உள்ள சிவப்பு வண்ணம் கலைந்து மஞ்சள் நிறமாக மாற ஆரம்பித்தது. இப்படித்தான் முறைக்கேடு நடக்கிறது செவ்வாழை மோசடி என்று முடிகிறது அந்த வீடியோவில். செவ்வாழை மற்ற வாழை...